Answers for "tn state"

0

tn state

ஐந்து கோப்புகளில் ஸ்டாலின் கையெழுத்து


முதல் கையெழுத்தாக 2.07 கோடி அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு நிவாரணமாக, ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் முதல் கையெழுத்திட்டார். முதல் தவணையாக, இம்மாதமே ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.


2வது கையெழுத்து ;

ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 ஆக குறைப்பு


3வது கையெழுத்து


அரசு உள்ளூர் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். இதற்கான அடையாள அட்டை வழங்கப்படும். நாளை முதல் பெண்கள் பயணிக்கலாம்.


4வது கையெழுத்து


மக்களின் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற திட்டத்தை உருவாக்கி, அதற்கு ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமித்தல்.


5வது கையெழுத்து


தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏற்கும் .
இவ்வாறு 5 கோப்புகளில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டார்.



4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்


தமிழக முதல்வர் ஸ்டாலினின் தனிச்செயலர்களாக, உதயசந்திரன், உமாநாத், எம்.எஸ். சண்முகம், அனு ஜார்ஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
Posted by: Guest on May-07-2021

Browse Popular Code Answers by Language